வியாழன், 6 நவம்பர், 2014

பெண்கள் மேல்நிலை பள்ளியில், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி வழங்கல்

பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் பல நாட்களுக்கு முன்பே வந்தும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் அதுகுறித்து பலரும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர், அதைத்தொடர்ந்து இன்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி.இராமஜெயம் , சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி உள்ளிட்டோர் நேரில் வந்து மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியும், மிதிவண்டியையும் வழங்கினர்.
 
விழாவில் கலந்து கொண்ட புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி.இராமஜெயம் பேசுகையில் "பலரும் அரசு பள்ளிகளை புறம் தள்ளுவது வருத்தம் அளிக்கிறது, தனியார் பள்ளிகளில் கிடைக்காத பல சலுகைகள் அரசு பள்ளிகளில் கிடைக்கும், எனவே மக்கள் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

 
தொடர்ந்து பேசிய சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொண்டு, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் விழாவில் கலந்து கொண்ட புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி.இராமஜெயம் , சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி இருவரிடமும் பரந்கிப்பேட்டியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் சம்மந்தமாக பேசி மனு ஒன்றையும் அளித்தார், தேசிய கீதம் பாட நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நன்றி:mypno

0 கருத்துகள்:

கருத்துரையிடுக