
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து
இடங்களிலும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட
பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிக்காமல் தடுப்பதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகளின்
ஆலோசனையின் பேரில் பேரூராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு பயிற்சி பெற்ற சுய உதவிக்
குழுவினர்கள் 18 வார்டுகளிலும் டெங்கு ஒழிப்பு கொசு மருந்து அடித்தனர். தொடர்ந்து
வீடு, வீடாகச் சென்று டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு
பிரசுரம் வழங்கினர்.
டெங்கு, விஷ காய்ச்சல் பரவும் நிலையில் . வீட்டருகே பயன்படுத்தாத கல் உரல்,
டயர்கள், தேங்காய் மட்டைகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சுகாதார பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, குடிநீர் பிடிக்குமிடங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குடிநீரை காய்ச்சிய பின்னரே அருந்த வேண்டும்
என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக