
பொது சுகாதாரம் மற்றும் மருந்து தடுப்பு துரையின் சார்பில் Dr அமுதா பெருமாள் மற்றும் Dr பழனி சுவாமி மாவட்ட மலேரியா தடுப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினர்கள் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வந்து டெங்கு பற்றிய விழிப்புணர்வு, டெங்கு பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கை மற்றும் டெங்கு கண்டறியப்பட்டவர்களுக்கு மருந்துகள் போன்றவற்றை நாளை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்திற்கு கொண்டு வந்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
மேலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வண்ணம் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமஅத் அலுவலகத்தில் நாளை (6-11-2014) காலை 10:30 மணியிலிருந்து, பகல் 1 மணி வரை டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப் பட்டு, மருந்துகளும் வழங்கப் படும் பரிசோதனை கட்டணம் ரூபாய் 750 காய்ச்சல் கண்டறிய பட்டால் ஜமாஅத் நிர்வாகம் உடனடி மருந்து கொடுத்து மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிழ்ச்சை செய்ய உடனடி உதவிகள் செய்யப்படும் என்றும் .ஊர் பொது மக்கள் அனைவர்களும் ஜமாத் வந்து பயனடையுமாறு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வரும் சனிக்கிழமை(8-11-2014) அன்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் சார்பாக, ஷாதி மஹாலில் காலை 10 மணியிலிருந்து பகல் 12 மணி வரை டெங்கு பற்றிய விளக்கங்களும், எடிஎஸ் கொசு பரவும் விதத்தையும், அதை கட்டுபடுத்தும் முறை பற்றியும் நேர்முகமாக செயல் முறை விளக்கம்
அளிக்கப்படும் ஊர் பொதுமக்கள் அனைவர்களும் கலந்துக் கொண்டு, பயன் பெருமாறு ஜமாஅத் செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக