திங்கள், 3 நவம்பர், 2014

ஒரு வார இடைவெளிக்கு பிறகு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சிதம்பரம் அண்ணாமலைநகரில் 48.60 மில்லி மீட்டர் பதிவானது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதை அடுத்து வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்ததாழ்வு நிலையின் காரணமாக கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. அதிலும் குறிப்பாக கடலோர கிராமங்களில் கனமழை கொட்டியது. இதனால் குடியிருப்பு பகுதிகளை சுற்றியும், விளைநிலங்களையும் மழைநீர் சூழ்ந்தது.

ஆனால் கடந்த ஒருவார காலமாக மழை பெய்யவில்லை. மாறாக வெயில் அடித்தது. இதனால் குடியிருப்பு, விவசாய நிலங்களில் குளம்போல தேங்கி நின்ற தண்ணீர் வடிய தொடங்கியது.

இந்த நிலையில் தென் வங்க கடல் பகுதியின் மத்திய பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.



 அதன்படி, மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் நேற்று முன்தினம் காலையில் வெயில் அடித்தது. பின்னர் இரவு 7 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழையாக பெய்யாவிட்டாலும் நேற்று காலை வரையில் விட்டு, விட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது.

இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் தலையில் தொப்பி அணிந்தும், குடை பிடித்துக்கொண்டும் சென்றதை பார்க்க முடிந்தது. சாலையோர வியாபாரிகள் கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டும், மழைகோட்டு அணிந்தும் வியாபாரம் செய்தனர். காலை 10 மணிக்கு பிறகு மழை இன்றி வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. கடலூர் உழவர் சந்தையில் பொது மக்கள் கையில் குடைபிடித்தபடி காய்கறிகள் வாங்கி செல்வதையும் காணமுடிந்தது.

ஆனால் மாவட்டத்தின் பிற பகுதிகளான சிதம்பரம், பரங்கிப்பேட்டை, அண்ணாமலைநகர், கொத்தவாச்சேரி, புவனகிரி, குப்பநத்தம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கி நின்றது.


 நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 48.60 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக எட்டையாபுரத்தில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. சராசரியாக 20.78 மில்லி மீட்டர் பதிவானது. மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்துள்ள மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கொத்தவாச்சேரி -46

பரங்கிப்பேட்டை -44
சிதம்பரம் -43

புவனகிரி -30

குப்பநத்தம் -28.20

சேத்தியாத்தோப்பு -23

வேதநத்தம் -20

வைப்பார் -20

விருத்தாசலம் -20

கழுகுமலை -19

ஸ்ரீமுஷ்ணம் -19

கடலூர் -18.90

பெலாந்துறை -16

காட்டுமன்னார்கோவில்

- 14

வானமாதேவி -12.40

லால்பேட்டை -11.50

வேப்பூர் -11

கடல்குடி -11

சூரங்குடி -10

லக்கூர் -9.20

கீழ்செருவாய் - 7

காட்டுமயிலூர் -7

பண்ருட்டி -6

தொழுதூர் -5.60

photo:file

0 கருத்துகள்:

கருத்துரையிடுக