வெள்ளி, 7 நவம்பர், 2014

கடலூர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர்–கண்டக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர்:அரசு போக்குவரத்துக்கழக டிரைவர், கண்டக்டர் பணிக்கான விண்ணப்பங்கள் கடலூர் அரசு போக்குவரத்துக்கழக  அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தில் 256 டிரைவர்களும், 295 கண்டக்டர்களும், தினக்கூலி அடிப்படையில் 83 இளநிலை தொழில் வினைஞர்களும் மொத்தம்  634 பணியிடங்களுக்கு ஆட்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர்

விழுப்புரம் கோட்டத்துக்குட்பட்ட அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகங்களில் இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடலூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகத்திலும்  விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது

தகுதிகள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், டிரைவர் பணிக்கு 8–ம் வகுப்பு தேர்ச்சியும், கண்டக்டர் மற்றும் இளநிலை தொழில்வினைஞர் ஆகிய பணிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்றார்.
இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வருகிற 20–ந் தேதி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 8–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக