ஞாயிறு, 23 நவம்பர், 2014

குவைத் வாழ் வெளிநாட்டவர்கள் சட்டம்!


குவைத்:குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு சட்ட பாதுகாப்பு அதிகரிக்ப்படும் என குவைத் மனித வள மேம்பட்டு இயக்குனர்  அல்- ஜமால் தோஸ்திரி  தொழிலாளர் சட்டம் எண்: 6/2010அதிரிகார உறுதிப்பாட்டை வெளியிட்டார்.

அதன் விளக்கமாவது, தொழிலாளர்களின் ஆண்டு விடுப்பு நாளை அதிகரித்தும், உடல்நிலை சரியில்லாமல் எடுக்கும் விடுமுறைக்கும், மதம் சார்ந்த விடுமுறைகளுக்கும் மற்றும் குழந்தை பேறு விடுமுறைக்கும், அரசாங்க விடுமுறைக்கும் தொழிலாளர் சட்டம் எண்:6\2010படி பிடித்தம் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

இந்த சட்டம் தனியார் தொழில் புரியும் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு பொருந்தும் என்று அவர் தனது செய்தியறிக்கையில் வெளியிட்டுள்ளார், இதனை மீறுபவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சட்ட மீறுபவர்களின் மீது புகாரின் பேரில் நீதிமன்றம் இருவர்களுக்கிடையேயான பிரச்சினையை சரிசெய்யும் என சுட்டிக் காட்டினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக