சனி, 22 நவம்பர், 2014

உலகின் டாப் 15 நகரங்களில் முதலிடத்தில் துபாய்; 13-வது இடத்தில் மும்பை

துபாய்: உலகின் டாப் 15 நகரங்களில் துபாய் முதலிடத்திலும், 13வது இடத்தில் மும்பையும் இடம் பிடித்துள்ளது.சர்வதேச அளவில் நகரங்களில் நிலவும் சுறுசுறுப்பான பொருளாதாரம், தனி நபர் வாழ்க்கைதரம், அன்றாட செலவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, பிரான்ஸ் முன்னாள் மாணவர் அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் டாப் 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொன்றுக்கும் தனித் தனியே மதிப்பீடு வழங்கப்பட்டது. அதன்படி, ஒட்டுமொத்தமாக துபாய் நகரம் முதலிடம் பெற்றுள்ளது. 13வது இடத்தை மும்பை நகரம் பிடித்துள்ளது.
டாப் 15 நகரங்கள் பட்டியலில் 2வது இடத்தில் நெதர்லாந்தின் அம்ஸ்டெர்டம், 3வது இடத்தில் டொர்னொடொ, 4வது இடத்தில் சிங்கப்பூர், 5வது இடத்தில் மாட்ரிட், 6வது இடத்தில் ஹாங்காங், 7வது இடத்தில் நியூயார்க், 8வது இடத்தில் டோக்கியோ, 9வது இடத்தில் ஷாங்காய், 10வது இடத்தில் லண்டன், 11வது இடத்தில் பாரிஸ்,12வது இடத்தில் மிலனோ, 13வது இடத்தில் மும்பை, 14வது இடத்தில் மாஸ்கோ, 15வது இடத்தில் சா போலொ ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக