சிறுபான்மையினத்தவர்கள் கல்விக்கடன், தனிநபர் கடன், சுய உதவிக்குழு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் ரூ.81 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 3ஆயிரம் வரையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் கடன் வழங்கப்படுகிறது. எனவே, இருப்பிடம் குறித்த சான்றுகள் மற்றும் திட்ட அறிக்கை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
கல்விக்கடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பிற்கு (1 ஆண்டு) ரூ.3 லட்சம் வரையிலும், தொழில்கல்வி, தொழில்நுட்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பு படிப்பிற்கு (அதிகபட்சம் 5 ஆண்டு) ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வரையும், முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வீதம் ரூ. 6 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது.
வெளிநாடுகளில் தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்புகள் பயில்பவர்களுக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரையில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வீதம் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும். இந்த கடன்களுக்கு ஆண்டிற்கு 3 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
கல்வி பருவக்காலம் முடிந்த தேதியிலிருந்து அடுத்த 6-வது மாதத்திலிருந்து அல்லது பணியில் அமர்ந்த தேதியிலிருந்து இதில் எது முந்தையதோ அந்த தேதியிலிருந்து அசல் மற்றும் வட்டி தொகை 60 மாதம் வசூலிக்கப்படும்.
கடன் தொகை செலுத்தத் தவறினால் 5 சதம் அபராத வட்டியுடன் அசல் மற்றும் வட்டித்தொகை வசூலிக்கப்படும்.
கல்விக்கடன் பெற சாதிச்சான்று, பள்ளி மாற்றுச்சான்றிதழ், வருமான சான்று, இருப்பிடச் சான்று, உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் வங்கி கோரும் இதர இனங்கள்.
கல்விக்கடன் புதுப்பிக்க ஒவ்வொரு ஆண்டும் மாணவ, மாணவியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழை வங்கியில் தவறாது சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி அனைத்து ஆவணங்களின் நகல்கள் கல்வி நிலையத்தின் முதல்வரின் கையொப்பம் அவசியம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக