வெள்ளி, 21 நவம்பர், 2014

கடல் பகுதியில் பலத்த காற்று:கேரளா மீன் விற்பனை அமோகம்

பரங்கிப்பேட்டை: கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் பெரும்பாலான மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் கேரள மாநில மீன்கள் விற்பனை பரங்கிப்பேட்டையில் அமோகமாக நடந்தது.
பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், மடவப்பள்ளம் , புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, சின்னூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள்
பரங்கிப்பேட்டை வெள்ளாற்று முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் நேற்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் பரங்கிப்பேட்டை மீன் வியாபாரிகள் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மீன்களை விற்பனை செய்தனர். சங்கரா மீன் கிலோ 100 ரூபாய், அயிலா மீன் கிலோ 100 ரூபாய், கவலை மீன் 30 கிலோ கொண்ட பாக்ஸ் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு இங்கிருந்து மீன் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று அங்கிருந்து மீன்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப் பட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக