வியாழன், 20 நவம்பர், 2014

இந்தியாவில் முதன் முறையாக சோதனைக் குழாய் மூலம் இரட்டைக் குழந்தை - சென்னை மருத்துவர்கள் சாதனை

இந்தியாவில் முதன் முறையாக சோதனைக் குழாய் மூலம் இரட்டைக் குழந்தையை பிரசவித்து சென்னை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
 
இந்தியாவில் முதன்முதலாக சோதனைக்குழாய் முறையில் சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு நேற்று இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது. சென்னையில் நடிகர் ஜெமினிகணேசனின் மகளான டாக்டர் கமலா செல்வராஜும், அவருடைய மகள் டாக்டர் பிரியா செல்வராஜும் சேர்ந்து புதிய சாதனை புரிந்துள்ளனர். அதாவது சோதனைக்குழாய் முறை மூலம் கருத்தரிப்பு செய்து குழந்தை பிரசவித்துள்ளனர்.
 
இதுகுறித்து டாக்டர் கமலா செல்வராஜ் கூறுகையில், 'இவ்வாறு உருவாக்கப்படும் கருவை உருவான 40 நாட்களில் ஸ்கேன் எடுத்து பார்த்தால் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வாய்ப்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஏதேனம் குறைபாடுடன் தான் குழந்தை பிறக்க வாய்ப்பு இருந்தால், குழந்தையை கருவிலேயே அழித்துவிடலாம்' என்று கூறியுள்ளார்.
 
அவ்வாறாக குறைபாடு இல்லாமல் நவீன முறையில் சோதனைக்குழாய் மூலம் தென்னிந்தியாவில் முதன்முதலாக இரட்டைக்குழந்தை தற்போது பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு குழந்தைகளில் ஒன்று ஆண் குழந்தை, மற்றொன்று பெண் குழந்தை என்பது சிறப்பம்சமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக