வெள்ளி, 21 நவம்பர், 2014

வத்தகரை மீன்பிடி இறங்கு தளம் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் (வத்தகரை) உள்ள மீன்பிடி இறங்கு தளத்தை மீனவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் செழியன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விவரம்:
பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி இறங்குதளம் கட்டித்தரக் கோரி கடந்த 20 ஆண்டாக மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்ததன் பேரில் அன்னங்கோவிலில் கடந்த 2011ம் ஆண்டு 13 கோடி ரூபாய் மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கும் பணிகள் துவங்கியது. கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை ஏலம் விட 3 கட்டடங்கள், மீனவர்களின் வலைகளை காய வைக்க, பின்னுவதற்கு 2 கட்டடங்கள், மீன் விற்பனை செய்ய 3 கட்டடங்களில் 120 அறைகள், பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக கழிவறை, குடிநீர், வாகனங்கள் பார்க்கிங் வசதி, நிர்வாக அலுவலகம், மீன் பதப்படுத்தும் ஐஸ் பிளாண்ட் உள்ளிட்ட அனைத்து கட்டட பணிகளும் முடிந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன் மீன்பிடி இறங்கு தளத்தை முன்னாள் முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் இன்னும் மீனவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே, மீன்பிடி இறங்குதளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக