பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே வட்டிக்கடையை உடைத்து திருட முயன்ற மர்ம
நபர்கள் லாக்கரில் இருந்த பூட்டுகளை உடைக்க முடியாததால் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள
தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் தப்பியது.சிதம்பரம் பஜனை மடத்தெருவைச்
சேர்ந்தவர் அருண். இவர் பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் மெயின்ரோட்டில்
வட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வட்டிக்கடையின்
பூட்டை உடைத்து உள்ளே சென்று லாக்கரை உடைத்துள்ளனர்.லாக்கரில் பூட்டியிருந்த ஐந்து
பூட்டுகளில் இரண்டு பூட்டை உடைந்துள்ளனர். மூன்று பூட்டுகளை உடைக்க முடியாததால்
மர்ம நபர்கள் அப்படியே போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர்.தகவலறிந்த டி.எஸ்.பி.,
ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர் கண்ணுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை
நடத்தினர்.
லாக்கரை உடைத்து இருந்தால் 2 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு
போயிருக்கும். லாக்கரை உடைக்க முடியாததால் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை
மற்றும் வெள்ளி பொருட்கள் தப்பியது. கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள்
வரவைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாய் புருனே வட்டிக்கடையில்
இருந்து பு.முட்லூர் காந்தி நகர் வரை சென்று திரும்பியது.இதுகுறித்து
பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக