கடலூர், : கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள், வாகன விபத்துகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., ராதிகா உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பிக்கள் செந்தில், திருமலைசாமி, வெங்கடாஜலபதி ஆகியோர் மேற்பார்வையில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, பண்ருட்டி உள்பட 7 உட்கோட்ட காவல் சரகத்தில் தீவிர வாகன தணிக்கை, சந்தேகத்துக்கு இடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய நடத்தப்பட்ட சோதனையில் குடிபோதையில் வாகன ஓட்டுதல், அதிவேகமாகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் வாகன ஓட்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடலூர் உட்கோட்ட காவல் சரகத்தில் 245 வழக்குகளும், சிதம்பரம் 193, விருத்தாசலம் 130, நெய்வேலி 233, சேத்தியாத்தோப்பு 124, பண்ருட்டி 219, திட்டக்குடி 140 என மொத்தம் 1964 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல் மாவட்டம் முழுவதும் சந்தேகத்துக்கிடமான இடங்கள், லாட்ஜ்கள், திருமண மண்டபங்கள் என 90 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சாராய கடத்தல் பிரிவில் 42 வழக்குகளும், சந்தேகத்துக்கிடமான வகையில் 49 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. விடிய, விடிய நடத்தப்பட்ட சோதனை யில் பழைய குற்றவாளிகள் 58 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று பிரச்னைக்குரியவர்கள் பிரிவில் 62 பேர் காவல் நிலையங்களில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையின் அதிரடி வேட்டையால் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வாகன சோதனைக்காக கூடுதலாக 52 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. காவல்துறையின் இந்த ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் தொடரும் என உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக