சிதம்பரம்:சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகராஜன். இவரது மகன் ஆனந்த் (வயது 17). இவர் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை ஆனந்து பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது அவரை வழிமறித்து சீனியர் மாணவர்கள் ‘ராகிங்’ செய்தனர். இதனை ஆனந்து தட்டிக்கேட்டார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அன்று மாலை கல்லூரி முடிந்து ஆனந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். சிதம்பரம் மேம்பாலத்தில் வந்தபோது அவரை சீனியர் மாணவர்கள் வழிமறித்து ஆனந்துவை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர். சிதம்பரம் முத்தையா நகருக்கு கடத்தி சென்ற அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து ஆனந்துவை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் மீண்டும் ஆனந்துவை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று சிதம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள சகுந்தலா நகருக்கு கொண்டு சென்றனர். அங்கு மீண்டும் ஆனந்துவை சரமாரி தாக்கி அவரை ரோட்டில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆனந்துவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆனந்து அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலை நகர் போலீசார் அண்ணாமலை பல்கலைக்கழக சீனியர் மாணவர்கள் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ரகுபதி (18), மகேந்திரன் (19), சையது ஆசிப் (20), ரமேஷ்குமார் (20) ஆகிய 4 மாணவர்களை கைது செய்தனர். மேலும் முகமது ஆசிப், மோகன்ராஜ், அரவிந்த்சாமி, செல்வம் உள்பட 14 மாணவர்களை தேடி வருகிறார்கள்.
‘ராகிங்’ தகராறில் மாணவர் கடத்தி சென்று தாக்கப்பட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக