வெள்ளி, 14 நவம்பர், 2014

பரங்கிப்பேட்டையில் விடிய விடிய கொட்டிய மழை

பரங்கிப்பேட்டை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதனால் பரங்கிப்பேட்டை மற்றும்  கடலூர்,மாவட்டம்  உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது .
கடலூர் மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி இரவு முதல் மழை பெய்து வருகிறது.  பரங்கிப்பேட்டையில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.நேற்று காலை 7:00 மணிக்கு மீண்டும் துவங்கி 10:00 மணி வரை இடைவிடாமல் பெய்தது. பின்னர் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.இதனால் சாலைகளில் வாகனம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைந்த அளவே காணப்பட்டதால் நகர் வெறிச்சோடி காணப்பட்டது





நேற்று வியாழன் சந்தை என்பதால் சந்தையில் மிக குறைந்த அளவே  மக்கள் கூட்டமே காணமுடிந்தது



நேற்று முன்தினம் காலை 8:00 முதல் நேற்று காலை 8:00 மணிவரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ., விவரம்: கடலூர் 38.10, சிதம்பரம் 38, கீழ்ச்செருவாய் 37, புவனகிரி, பரங்கிப்பேட்டையில் தலா 36, விருத்தாசலம், லால்பேட்டையில் தலா 33, குப்பநத்தம் 32.20, காட்டுமன்னார்கோவில் 30, ஸ்ரீமுஷ்ணம், மே.மாத்தூரில் தலா 26, தொழுதூர், வானமாதேவியில் தலா 24, கொத்தவாச்சேரி 21, சேத்தியாத்தோப்பு 19, வேப்பூர் 18, பெலாந்துறை 17, லக்கூர் 16.20, காட்டுமயிலூர் 15 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 53.40 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 27.80 மி.மீ., மழை பெய்துள்ளது.



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக