கொல்கத்தா:இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோகித் சர்மா.கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை
சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
மேலும் சேவாக் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார். எரங்கா பந்தை லாங் ஆஃப் திசையில் மிகப்பெரிய சிக்சர் அடித்து சேவாக் எடுத்த அதிகபட்ச ஒருநாள் கிரிக்கெட் ரன்கள் சாதனையைக் கடந்தார் ரோகித்.
ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களை எடுத்த ரோகித் சர்மா, இன்று மீண்டும் இரட்டைச்சதம் விளாசினார்.
முதல் 100 பந்துகளில் சரியாக 100 ரன்களை எடுத்த ரோகித், அடுத்த 50 ரன்களை 26 பந்துகளில் எடுத்து 150 ரன்கள் எடுத்தார். பிறகு 151 பந்துகளில் 200 ரன்களை கடந்தார் ரோகித். குலசேகரா பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அபார பவுண்டரி அடித்து அவர் இரட்டைச் சதம் கண்டார். இரண்டாவது 100 ரன்களை அவர் 51 பந்துகளில் எடுத்தார். மொத்தம் 173 பந்துகளை சந்தித்த அவர், 33 பவுண்டரிகளும், 9 சிக்சர்களையும் விளாசி 264 ரன்கள் குவித்தார்.

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த போது கோலி ரன் அவுட் ஆனார். இந்த முறையும் கோலி ரன் அவுட் ஆக, ரோஹித் சர்மா இரட்டைச் சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன் முதலாக இரட்டைசதம் எடுத்து சாதனை நிகழ்த்தினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணியிலிருந்து 4 இரட்டைச் சதங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தின் 150-வது ஆண்டு விழாவை ரோஹித் சர்மா தனது 3 உலக சாதனைகளினால் சிறப்புறச் செய்துள்ளார். இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்தது.
264 ரன்களை 173 பந்துகளில் குவித்து 50-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார் ரோகித் சர்மா.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் எடுத்த வீரர், சர்வதேச ஒருநாள் போட்டியில்ல் முதல் முறையாக 250 ரன்களைக் கடந்த வீரர் என ரோஹித் சர்மா 3 உலக சாதனைகள் படைத்த இந்த இன்னிங்ஸில், இந்தியா 5-வது முறையாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 400 ரன்களுக்கும் மேல் குவித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக