சனி, 1 நவம்பர், 2014

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நாளை சிறப்பு முகாம்


கடலூர்: மாவட்டத்தில் நாளை 2ம் தேதி 1,155 மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் நடக்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த 26ம் தேதி நடந்தது. அதில் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 275 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இரண்டாம் கட்டமாக நாளை 2ம் தேதி மாவட்டத்தில் உள்ள 1,155 ஓட்டுச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கல், திருத்தம் மற்றும் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட உரிய படிவங்களை பூர்த்தி செய்து, வழங்கலாம். இதுதொடர்பாக சந்தேகம் இருப்பின் கலெக்டர் அலுவலகம் 04142-230652, ஆர்.டி.ஓ.,க்கள் கடலூர் 04142 231284, விருத்தாசலம் 04143-260428, சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் 04144-222256 ஆகிய தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக