கடலூர் முதுநகர் :கடலூர் துறைமுகத்தில் வீசிய பலத்த காற்றால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இழுவை கப்பல் சுமார் 3 கி.மீ. தூரம் கடலில் அடித்துச்செல்லப்பட்டது. அதனை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பலத்த காற்றுடன் மழைபெய்தது. அப்போது கடலூர் துறைமுக பகுதியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இழுவை கப்பல் நங்கூரத்தை அறுத்துக்கொண்டு வேகமாக கடலில் அடித்துச்செல்லப்பட்டது. சுமார் 3 கி.மீ. தூரம் சென்ற அந்த இழுவை கப்பல் சொத்திக்குப்பம் மீனவ கிராமம் அருகே கரையில் மோதி தரைதட்டிநின்றது. இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி கிராம மக்கள் அந்த இழுவை கப்பலை ஆர்வத்துடன் கூட்டம், கூட்டமாக சென்று வேடிக்கை பார்த்தனர்.
500 டன்
தனியார் ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இந்த கப்பல், சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வரும் கப்பல்களை தற்காலிக துறைமுகத்துக்கு(ஜெட்டி) இழுத்துவரும் பணியில் ஈடுபடுத்துவர். இந்த இழுவை கப்பலின் எடை 500 டன்னுக்கும் அதிகமாகும்.
ஒவ்வொரு இழுவை கப்பலிலும் 10 ஊழியர்கள் பணியாற்றுவார்கள். சொத்திக்குப்பம் அருகே கரை ஒதுங்கியுள்ள இந்த இழுவை கப்பலை வேறு 2 இழுவை கப்பல்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக