சனி, 22 நவம்பர், 2014

சிட்டா, அடங்கல் பெற ரூ.150 லஞ்சம் ! : விவசாயிகள் பகிரங்க குற்றச்சாட்டு

கடலூர்:யூரியா வாங்குவதற்காக சிட்டா, அடங்கல் பெற வி.ஏ. ஓ.,க்களுக்கு 150 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது'' என குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் பகிரங்கமாக குற்றம்சாட்டியதால் பரபரப்பு நிலவியது.

மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று கடலூரில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் தனசேகரன், துணை இயக்குனர் ஹரிதாஸ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், யூரியா வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் சிட்டா, அடங்கல் கொடுத்து யூரியா பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


ஆனால், விவசாயிகள் சிட்டா, அடங்கல் பெற வி.ஏ. ஓ.,க்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.


நேற்று நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர், தற்போது யூரியா வழங்கிட சிட்டா, அடங்கல் கொண்டு வர வேண்டும் என தொடக்க வேளாண் வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால், சிட்டா, அடங்கல் பெற 150 ரூபாய் செலவாகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.


கலெக்டர் முன்னிலையில் விவசாயிகளின் கூறிய பகிரங்க குற்றச்சாட்டால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.உடன் கலெக்டர், கம்ப்யூட்டரில் சிட்டா பெற 2 ரூபாய் மட்டுமே கட்டணம் செலு<த்த வேண்டும். அடங்கல் வி.ஏ.ஓ., தான் எழுதித் தர வேண்டும். பழைய சிட்டா, அடங்கலின் நகலைக் கொண்டு வந்தால் யூரியா வழங்கிட வேண்டும் என கூட்டுறவுத் துறையினருக்கு உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக