வியாழன், 16 அக்டோபர், 2014

‎பரங்கிப்பேட்டை‬ TNTJ கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

பரங்கிப்பேட்டை:தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15  வரை ஒரு மாத காலம்  தீவிரவாத்திற்கு‬ எதிரான  முஸ்லிம்களின்‬ தீவிர பிரச்சாரம் அறிவிப்பு  செய்திருந்துததை ஏற்கனேவே செய்தி எமது தளத்தில் வெளியிட்டு இருக்கிறோம்
அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக தெத்துக்கடை, சஞ்வீராயர் தெரு, மேட்டு தெரு, கச்சேரி தெரு போன்ற இடங்களில் மற்று மத சகோதர, சகோதரிகளை சந்தித்து  ‪‎இஸ்லாம்‬  தீவிரவாத்தைப்‬ போதிக்கின்றதா? என்ற தலைப்பில் கைப்பிரதி (நோட்டீஸ்) விநியோகம் செய்யப்பட்டது
இது மிகவும் தேவையான பிரச்சாரம் நன்றாக செய்யுங்கள் என்று பிறமத சகோதர, சகோதரிகள் நல்ல வரேவேர்ப்பு இருந்தது
இஸ்லாம் மீதும் , முஸ்லிம்கள் மீதும் மீடியாக்கள் மூலம் பரப்பப்படும் பொய்யான தீவிரவாத பட்டத்தை ஒழிக்கவும் இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாத்தை  பின்பற்றும் முஸ்லிம்கள் மனிதநேய மிக்கவர்களே என்பதை உணர்த்தும் இந்த துண்டு பிரசுரம் மற்றும் பிரசாரம்
மாற்று மத சகோதர சகோதரிகளிடத்தில் முஸ்லிம்களை பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள
உதவும்
தொடர்ந்து  நவம்பர் 15  வரை பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை அறிவித்துள்ளது இதே போல் தமிழகம் முழவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அணைத்து ஊர் கிளைகளும் தீவிரவாத்திற்கு‬ எதிரான  முஸ்லிம்களின்‬ தீவிர பிரச்சாரம் செய்யப்பபடுகிறது குறிப்பிடத்தக்கது
 













 படங்கள்:‎பரங்கிப்பேட்டை‬ TNTJ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக