கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி(தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டு மேலும் அவர் பேசியது:
திட்டக்குடி(தனி) பேரவைத் தொகுதியில் 96,936
ஆண், 97461 பெண் என மொத்தம் 1,94,307 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல, விருத்தாசலம் தொகுதியில் 1,11,916 ஆண், 1,08,514 பெண், மற்றவர் 4 என 2,20,434 வாக்காளர்கள், நெய்வேலி தொகுதியில் 95,670 ஆண், 92,471 பெண் மற்றவர் 8 என 1,88,149 வாக்காளர்கள், பண்ருட்டி தொகுதியில் 1,06,022 ஆண், 1,07,497 பெண் மற்றவர் 8 என 2,13,527 வாக்காளர்கள், கடலூர் தொகுதியில் 1,05,107 ஆண், 1,09,250, மற்றவர் 18 என 2,14,375, குறிஞ்சிப்பாடி தொகுதியில் 1,05,056 ஆண், 1,03,550 பெண், மற்றவர் 1 என 2,08,607, புவனகிரி தொகுதியில் 1,14,703 ஆண், 1,11,733 பெண் என 2,26,436, சிதம்பரம் தொகுதியில் 1,07,829 ஆண், 1,08,103 பெண், மற்றவர் 1 என 2,15,933, காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 1,02,695 ஆண், 97,240 பெண், மற்றவர் 3 என 2,00,118 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 9,45,934 ஆண் வாக்காளர்கள், 9,35,999 பெண் வாக்காளர்கள், 43 திருநங்கைகள் வாக்காளர்கள் என மொத்தம் 18,81,976 வாக்காளர்கள் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் 9 சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகங்களில் புதன்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
தவிர அக்.17 மற்றும் அக்.30ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் வைக்கப்படுகிறது. ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற வலைத்தளத்தில் காணலாம். எனவே, பொதுமக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை மேற்குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் வரைவுப் பட்டியலை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
1.1.2015 அன்று தகுதியடைந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக்.15 முதல் நவ.10ஆம் தேதி வரை தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் (படிவம் 6) மார்பளவு புகைப்படம், இருப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான ஆதாரத்துடன் இணைத்து கொடுக்க வேண்டும். குடும்ப அட்டை, பாஸ்போர்ட் ஓட்டுநர் உரிமம், அஞ்சலக சேமிப்பு புத்தகம், தொலைபேசி கட்டண ரசீது, எரிவாயு இணைப்பு ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முகவரிச் சான்றாக அளிக்கலாம்.
பிறப்புச் சான்று மற்றும் பள்ளிச் சான்றின் நகல் ஆகியவற்றை வயது சான்றாக அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்க படிவம்-7, திருத்தங்கள் மேற்கொள்ள படிவம்-8 மற்றும் ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் இடம் மாறியிருந்தால் படிவம் 8 ஆகிய படிவங்களை அளித்து பயன்பெறலாம் என்றார் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார்.
சிதம்பரத்தில்
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி), புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தனியான வரைவு வாக்காளர் பட்டியல்களை, சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் எம்.அன்புச்செல்வி (சிதம்பரம்), பாலகிருஷ்ணன் (காட்டுமன்னார்கோவில்), துணை வட்டாட்சியர்கள் (தேர்தல்) தமிழ்ச்செல்வன், அந்தோணிராஜ், நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர், அதிமுக பிரமுகர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருத்தாசலத்தில்
விருத்தாசலம், திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார் வெளியிட்டார்.
வட்டாட்சியர்கள் சு.சீனிவாசன் (விருத்தாசலம்), பா.தேவநாதன் (திட்டக்குடி), தேர்தல் வட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், செந்தில்குமார், தேர்தல் உதவியாளர்கள் லட்சுமணன், யேசுராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக