வியாழன், 9 அக்டோபர், 2014

இலவச கண் சிகிச்சை முகாம்



பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பேரூராட்சித் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கி கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் நடராஜன், செயல் அலுவலர் ஜெயராமராஜா முன்னிலை வகித்தனர். அமர்நாத் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், கவுன்சிலர்கள், துப்பரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். கவுன்சிலர்கள் சிவவடிவேல், அம்சவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக