கடலூர்:வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையை அடுத்து, கடலூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்றும், கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக திங்கள்கிழமை இரவு கடலூர் பகுதிகளில் லேசான காற்றுடன் பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் வானம் மேக மூட்டமாக இருந்தாலும் மழை இல்லை
அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலமானது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'ஹுட்ஹுட்' என பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: "ஹுட்ஹுட் புயல், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே விசாகப்பட்டினம், கோலாப்பூர் பகுதிகளில் அக்டோபர் 12-ம் தேதி கரையை கடக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தப் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக