புதன், 15 அக்டோபர், 2014

விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றவரை சுட்டுக் கொன்று எஸ்.ஐ வெறிச்செயல்.

ராமநாதபுரம் : விசாரணைக்கு அழைத்து சென்ற கைதியை காவல் நிலையத்தில் சுட்டுக் கொன்று எஸ்.ஐ. காளிதாஸ் வெறிச்செயல்.ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த சையது முகம்மது என்பவரை, விசாரணைக்காக எஸ்.பி.பட்டினம் காவல்நிலைய எஸ்.ஐ. காளிதாஸ் நேற்று (14ஆம் தேதி) அழைத்துச் சென்றார். இதையடுத்து, காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின்போது, சையது முகமது கத்தியால் எஸ்.ஐ.யை
தாக்க முயன்றதாக காவல்துறை தரப்பில்
கூறப்படுகிறது.இதையடுத்து, எஸ்.ஐ. காளிதாஸ் தனது துப்பாக்கியால் சையது முகமது சுட்டுள்ளார். இதில் சையது முகமது சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆனால் இது காவல் துறையினரால் திரிக்கப்பட்ட கட்டுக்கதை என்று கூறப்படுகிறது.இதுகுறித்து, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சையது முகமதுவை சுட்டுக்கொன்ற எஸ்.ஐ. காளிதாஸை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகணன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, சுட்டுக்கொல்லப்பட்ட சையது முகமதுவின் உடல் தடயவியல் மருத்துவர்கள் வருகைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையாளி காளிதாஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக