சனி, 18 அக்டோபர், 2014

விடிய விடிய தொடர் மழை சிலு சிலுக்கும் பரங்கிப்பேட்டை(படங்கள்)

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மற்றும்  சுற்று பகுதியில்  நேற்று பகலில் விட்டு விட்டு பெய்த மழை இரவும் நீடித்தது. விடிய, விடிய பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது ஓடியது இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை  பாதிக்கப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழையால். தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிகபட்டுள்ளது அரசு பள்ளிகள் வகுப்பு கள் தொடங்கி பின்  விடுமுறை அளிக்கபட்டது 

மேலும் டெல்லி சாஹிப் தர்ஹா மற்றும் புது நகர் ,ஹாக்க சாஹிப் தெரு வளாகம் மற்றும் குடிசை பகுதிகளில்  தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ளது  மேலும் மீரபள்ளின் குளத்தின் ‪‎சுற்றி இருந்த தடுப்பு‬ சுவர்‬ இடிந்து‬ ‪‎விழுந்தது, மற்றும் ரஹ்மத் நகர் பகுதியில் சுற்றி உள்ள சாலை மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது தாழ்வான பகுதி என்பதால் ஒரு சிலே வீட்டுக்குள் தண்ணீர் உட்புகுந்துள்ளது.இதனால் அப்பகுதி தீவு போல் காட்சியளிக்கிறது



























கடலூர், பரங்கிப்பேட்டை பகுதியில் அலைகளின் சீற்றம் தொடர்ந்ததால் 2–வது நாளாக இன்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சிதம்பரத்தில் 48 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பிற பகுதிகளின் மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்). அண்ணாமலை நகர் 37.80, கடலூர் 23.80, சேத்தியாதோப்பு 17, பரங்கிப்பேட்டை 15, கொத்தவாச்சேரி 8, விருத்தாசலம் 6.30 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக