ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பரங்கிப்பேட்டையில் கஞ்சி கலயம் உடைப்புப் போராட்டம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் நூறு நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்கம் சார்பில் கஞ்சி கலயம் உடைக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரங்கிபேட்டையில் அகில இந்திய விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், மத்திய தொழிற் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை சார்பில் பரங்கிபேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகம் முன்பு கஞ்சி கலையம் உடைக்கும் போராட்டம் நடபெற்றது.
இந்த போராட்டத்துக்கு மத்திய தொழிற் சங்க மாவட்ட இணைச் செயலர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். விவசாய சங்கத் தலைவர் ஜீவா, ஒன்றிய அமைப்பாளர் கருணைச்செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் சிவலிங்கம், மாதர் சங்க செயலர் புஷ்பா, ரமானந்தம், மணி, வினோபா, பழனியம்மாள், அஞ்சம்மாள், மாணவர் சங்க மாவட்டச் செயலர் சுனில்குமார், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இப் போராட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக