புதுச்சேரி:புதுச்சேரி ஜிப்மர் மருத்து வமனையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்படவுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
கடலூர் நெல்லிக்குப்பம் வ.உ.சி. பகுதியைச் சேர்ந்தவர் ஹசன் மெய்தீன். இவருக்கு ஒன்றரை வயதில் ஆஷிக் என்ற ஆண் குழந்தை உள்ளது. ஆஷிக்குக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்ததால், ஹசன்மெய்தீன் அங்குள்ள மருத் துவமனைகளில் காட்டியுள்ளார். பின்னர் கடந்த மாதம் 28ந் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்.
குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற் பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலை யில், நேற்று காலை குழந்தை ஆஷிக்கை மருத்துவர்கள் பரி சோதனை செய்த போது, குழந்தை யின் இடது கை முழுவதும் கருமை நிறமாக மாறியிருப்பதை கண்டனர்.
இதை தொடர்ந்து குழந்தையின் கையை அகற்ற வேண்டும், இல்லை என்றால் குழந்தை இறந்துவிடும் என பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் குழுந்தையின் கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் மீது குற்றஞ்சாட்டினர்.
மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மருத்துவர் கள் குழந்தையின் உயிருக்கு முழு உத்தரவாதம் அளிப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக