பரங்கிப்பேட்டை: தொடர் மழையால் கூரை வீட்டை இழந்த ஏழை பெண்ணுக்கு தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமா அத் சார்பில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மின்சார வசதியுடன் புதிய கூரை வீடு
கட்டிக் கொடுக்கப்பட்டது. இயற்கை சீற்றங்களின் போது பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண
உதவிகள், விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு ரத்தம் வழங்குவது உள்ளிட்ட சமூக
பணிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்
பரங்கிப்பேட்டை கருணாநிதி சாலையைச் சேர்ந்த மீனா என்பவரின் கூரை வீடு தொடர்
மழையின்போது கடுமையாக சேதமடைந்தது. கணவனை இழந்த அவர் புதிய கூரை வீடு கட்ட
முடியாமல் தவித்து வந்தார். தகவலறிந்த பரங்கிப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்
சார்பில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மின்சார வசதியுடன் புதிய கூரை வீடு கட்டிக்
கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று மாவட்ட துணைச் செயலர் பாஜல் உசேன் தøமையில்
நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவருக்கு புதிய கூரை வீடு கட்டிக் கொடுத்தனர். நகர
நிர்வாகிகள் அக்ரம், ஜாக்கிர், பாஷா, முத்துராஜா, நூர் சுக்கூர் அலி, ஹாஜா
மொய்தீன், நபிஸ், அப்துல் ரஹ்மான், ஹபிபுர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
photo:mr pno-வலம்புரி சங்கு
photo:mr pno-வலம்புரி சங்கு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக