செவ்வாய், 28 அக்டோபர், 2014

தனியார் பேருந்துகள் மோதல்:மருத்துவமனையில் பரங்கிப்பேட்டை நபர் சாவு

கடலூர்:தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் சிப்காட் அருகே சனிக்கிழமை காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில், சிகிச்சை பெற்றுவந்த பரங்கிப்பேட்டை பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் (53) திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப்
பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக