ஞாயிறு, 5 அக்டோபர், 2014

கடல்வாழ் உயராய்வு மையத்தில் சுத்தப்படுத்தும் பணி


பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய இயக்குனர் கதிரேசன், தூய்மை பணியை துவக்கி வைத்தார். ஆராய்ச்சி மாணவர்கள், துறை மாணவர்கள், பேராசிரியர்கள் வளாகத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். சுகாதாரமான, பசுமையான மற்றும் மகிழ்ச்சியான இந்தியாவை உருவாக்குவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆண்டிற்கு 100 மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்படுவோருக்கு சிறப்பு சான்றிதழ்
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் கடல்வாழ் உயிரியல் துறை பேராசிரியர்கள் வீரப்பன், அனந்தராமன், சவுந்திரபாண்டியன், தங்கராஜி, சரவணக்குமார், ராபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக