பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் அண்ணா துரை (55), சுகுமார் (45), முருகன் (40), கலையரசன் (20) ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் அண்ணா துரைக்கு சொந்தமான படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து விட்டு கரைக்குத் திரும்பினர். பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் அருகே வரும்போது காற்று பலமாக வீசியதால் படகு கவிழ்ந்தது.இந்த விபத்தில் நான்கு பேரும் கடலில் மூழ்கினர். அண்ணா துரை, முருகன், கலையரசன் ஆகியோர் நீந்தி கரைக்கு திரும்பினர். சுகுமார் மட்டும் திரும்பவில்லை. சின்னுரை சேர்ந்த மீனவர்கள் கடற்கரையோரம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அன்னங்கோவில் கடற்கரையோரம் சுகுமாரின் உடல் கரை ஒதுங்கியது.இதுகுறித்து சுகுமாரின் மனைவி நீலாவதி (40) கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்
ஞாயிறு, 19 அக்டோபர், 2014
பரங்கிப்பேட்டை கடலில் காணாமல் போன மீனவர் உடல் கரை ஒதுங்கியது
பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் அண்ணா துரை (55), சுகுமார் (45), முருகன் (40), கலையரசன் (20) ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் அண்ணா துரைக்கு சொந்தமான படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து விட்டு கரைக்குத் திரும்பினர். பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் அருகே வரும்போது காற்று பலமாக வீசியதால் படகு கவிழ்ந்தது.இந்த விபத்தில் நான்கு பேரும் கடலில் மூழ்கினர். அண்ணா துரை, முருகன், கலையரசன் ஆகியோர் நீந்தி கரைக்கு திரும்பினர். சுகுமார் மட்டும் திரும்பவில்லை. சின்னுரை சேர்ந்த மீனவர்கள் கடற்கரையோரம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அன்னங்கோவில் கடற்கரையோரம் சுகுமாரின் உடல் கரை ஒதுங்கியது.இதுகுறித்து சுகுமாரின் மனைவி நீலாவதி (40) கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக