ஞாயிறு, 19 அக்டோபர், 2014

தொடரும் கன மழை மாவட்டத்தில் அதிக பட்சமாக பரங்கிப்பேட்டையில் 127 மி.மீ., பதிவு

பரங்கிப்பேட்டை: கடலூர் மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடலூர்  மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பரங்கிப்பேட்டையில் விடிய விடிய பலத்த மழை கொட்டியது பரங்கிப்பேட்டையில் அதிக பட்சமாக 127 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை கொட்டி வருகிறது இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நேற்று தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது







சனிக்கிழமை காலை 8. 30 மணி வரையான 24 மணி தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 18 செ.மீட்டரும் நுங்கம்பாக்கத்தில் 16 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம், புதுச்சேரி, நாகை மாவட்டம் சீர்காழி , கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சென்னை கிண்டி ஆகிய இடங்களில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.





பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில் பகுதியிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், பரங்கிப்பேட்டை, கிள்ளை, முடசல்ஓடை, அன்னங்கோவில், எம்.ஜி.ஆர்.திட்டு, முழுக்குத்துறை, சின்னவாய்க்கால், பற்றடி, சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளாங்கிராயன்பேட்டை, பேட்டோரை, பெரியகுப்பம், அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, குமாரப்பேட்டை, மாலுமியார்பேட்டை, மடவாபள்ளம் உள்ளிட்ட கடலோர கிராம மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் அன்னங்கோவில், முடசல்ஓடை மீன் ஏலம் விடும் தளம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
வடகிழக்கு பருவமழை வரும் 22ம் தேதி துவங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது. இந்நிலையில் வளி மண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ., விவரம்:சிதம்பரம் 65, கடலூர் 73, பரங்கிப்பேட்டை 127, காட்டுமன்னார்கோவில் 71, தொழுதூர் 9, ஸ்ரீமுஷ்ணம் 13, விருத்தாசலம் 29.70, பண்ருட்டி 14.2, கொத்தவாச்சேரி 87, கீழ்ச்செருவாய் 8.50, வானமாதேவி 27.20, அண்ணாமலை நகர் 58.40, சேத்தியாத்தோப்பு 96, புவனகிரி 95, லால்பேட்டை 87, மேமாத்தூர் 51, காட்டுமயிலூர் 27, வேப்பூர் 22, குப்பநத்தம் 30.60, லக்கூர் 18.10, பெலாந்துறை 47 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 127.மீ.மீ., மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை கொட்டி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு பின்னர் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.கடந்த 15ம் தேதி இரவு முதல் இடைவிடாமல் அடமழையாக பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இரு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக நேரடி நெல் விதைப்பு சம்பா சாகுபடி வயல்களில் நீர் பிடிப்பு ஏற்பட்டு வருவதால், களை எடுப்பு, களைக்கொல்லி மருந்து தெளித்தல், உரம் போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் நகரில் கீழ வீதி, வாகீசன் நகர், அம்மாபேட்டை, முத்தையா நகர், தாண்டேஸ்வரநல்லூர், பள்ளிப்படை பகுதிகளில் ரோடு மற்றும் வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். சிதம்பரம் பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால், ரோடுகளில் மக்கள் நடமாட்டம்குறைவாகவே காணப்பட்டது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக