திங்கள், 20 அக்டோபர், 2014

6 நாளாக தொடர் மழை பரங்கிப்பேட்டையில் அதிகபட்ச மழை 109 மி மீ பதிவு


பரங்கிப்பேட்டை: மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 109மி.மீ,, மழை பெய்துள்ளது, வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்காரணமாக தமிழகத்தில் கடந்த 14ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே நிலையில்  நீடித்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது


 கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு மி.மீ., வருமாறு: கொத்தவாச்சேரி 36, பண்ருட்டி 16.2, வானமாதேவி 42, விருத்தாசலம் 13.4, குப்பநத்தம் 12.8, மேமாத்தூர் 10, வேப்பூர் 10, காட்டுமயிலூர் 6, லக்கூர் 9.1, ராமநத்தம் 12, கீழ்ச்செருவாய், பெலாந்துறை 15, சிதம்பரம் 67.3, வெலிங்டன் 12.5, சேத்தியாதோப்பு 46, புவனகிரி 65, பரங்கிப்பேட்டை 109, அண்ணாமலை நகர் 63.2, காட்டுமன்னார்கோவில் 36, ஸ்ரீமுஷ்ணம் 8, லால்பேட்டை 40, வீராணம் 45.50, கடலூர் 68.2 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 109மி.மீ., மழை பெய்துள்ளது. அதேப்போல் கடந்த 18ம் தேதி அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில்127 மி.மீ., மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் தற்காலிக கடை வைத்துள்ளவர்களும், நடைபாதை வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மழையினால் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுளது
படங்கள் :காமில்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக