கடலூர்: மின் விபத்தினைத் தவிர்க்க சேவை மையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என மேற்பார்வைப் பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார். கடலூர் மாவட்ட மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அருள்காந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின் விபத்தினைத்
தடுப்பதற்கு கடந்த ஜூலை மாதத்திலிருந்து புதிய சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் மிக
தாழ்வாகச் செல்லும் மின்பாதை, சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள், பழுதடைந்த
மின் கம்பங்கள், விவசாய நிலங்களின் அமைக்கப்பட்டிருக்கும் மின் வேலி பற்றிய
தகவல்களை சேவை மையத்தில் உள்ள 94458 56039 எண்ணுள்ள மொபைல் போனில் எந்த நேரத்திலும்
தெரிவிக்கலாம்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக