கடலூர், :மாவட்டத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.
வேப்பூர் தாலுகா
புதிதாக உருவாக்கப்பட்ட வேப்பூர் தாலுகாவில் பொதுமக்கள் கணினி சிட்டா, ‘அ’ பதிவேடு நகல்கள் ஆகியவற்றை பெறவும், நில உரிமை பட்டா மாற்றங்கள் செய்யவும் விருத்தாசலம் அல்லது திட்டக்குடி தாலுகா செல்ல வேண்டி இருந்தது.
சிரமங்களை தவிர்க்கும் வகையில் கணினி சிட்டா, ‘அ’ பதிவேடு நகல்கள் மற்றும் நில உரிமை பட்டா மாற்றங்களை வேப்பூர் தாலுகாவிலேயே மேற்கொள்ளும் வகையில் நிலப்பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் முறையை கலெக்டர் சுரேஷ்குமார் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
பாதாளசாக்கடை திட்டம்
பாதாளசாக்கடை திட்டத்தை பொறுத்தவரை மின்சாரவாரியம், நெடுஞ்சாலை, குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய 3 துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததே பணிகள் முடிவடைய காலதாமதம் ஆனது. தற்போது குறிப்பிட்ட துறைகளை ஒருங்கிணைத்து பணிகளை விரைவாக முடித்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இது வெற்றி அடைந்ததும் முதல்-அமைச்சரை கொண்டு திட்டம் தொடங்கி வைக்கப்படும்.
குண்டர் சட்டம் பாயும்
கடலூர் மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சாராயம் விற்பனை செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகள் இருக்க கூடாது, சாலை விபத்து இல்லாத மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அந்த வகையில் காலையில் வகுப்புகள் தொடங்கும் நேரமும், மாலையில் வகுப்புகள் முடியும் நேரத்திலும் பள்ளி, கல்லூரிகளின் முன்பு போலீஸ்காரர்களை நிறுத்தி போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது.
ரூ.20 லட்சத்தில் திட்டம்
அதேபோல் மாவட்டம் முழுவதும் விபத்துகள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.20 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேகத்தடைகள், பிரதிபலிப்பான்கள், எச்சரிக்கை பலகைகள், தடுப்பு சுவர், சிறுபாலங்கள் அமைக்கவும், சாலைகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மழைக்காலத்துக்கு முன்னதாகவே தரைப்பாலங்கள், ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளையும், தடுப்பணைகளை சீரமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும்
இதற்கு அடுத்ததாக கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வித்துறையை பொறுத்தவரை தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முறையாக பராமரிக்கவும், அவை 24 மணி நேரம் செயல்படவும் தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படும். அவ்வப்போது திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்கிறதா என கண்காணிக்கப்படும். அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி உள்ளூர் திட்டக்குழுமத்தின் மூலம் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக கல்வி நிறுவனங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து மற்ற கட்டிடங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் சில்வர் கடற்கரையை சீரமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்குள்ள குறைகள் சரிசெய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரன், வேப்பூர் தாசில்தார் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கலெக்டரின் அறிவிப்பை தொடர்ந்து மாவட்டத்தில் அனுமதி பெறாமல் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக