வியாழன், 7 ஆகஸ்ட், 2014

பரங்கிப்பேட்டையில் ஒன்றிய கூட்டம்

பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டையில் ஒன்றிய கூட்டம் நடந்தது. சேர்மன் அசோகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தாரா ஈஸ்வரி, புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர். துணைச் சேர்மன் திருமாறன், இன் ஜினியர் சந்தான கிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பார்த்திபன் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழக முதல்வரை விமர்சனம் செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை வன்மையாக கண்டிப்பது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க கொள்ளிடம் ஆற்றில் 400 கோடி ரூபாய் மதிப்பில் கதவணையும், பரங்கிப்பேட்டை உள்நாட்டு மீனவர்கள் நலன் காக்க 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. சுதந்திர தினத்தன்று அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக