பரங்கிப்பேட்டை;சம்பா நெல் சாகுபடி குறித்து பரங்கிப்பேட்டை வட்டார வேளாண்துறை சார்பில், சிதம்பரம் அருகேயுள்ள பின்னத்தூரில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மேட்டூர் அணை விரைவில் திறக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ள நிலையில் சம்பா நெல் சாகுபடியை உரிய காலத்தில் தொடங்கிடவும், சமீப ஆண்டுகளாக கைவிட்டுவிட்ட நஞ்சை, தரிசு பயறு வகை சாகுபடியை நிகழாண்டில் செய்திடவும் உரிய ஆலோசனைகள் கூட்டத்தில் வழங்கப்பட்டன.
வேளாண் உதவி இயக்குநர் சு.ரமேஷ், வேளாண் அலுவலர் சித.உண்ணாமலை ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
உதவிஇயக்குநர் சு.ரமேஷ் பேசியது: பரங்கிப்பேட்டை வட்டம், திருவக்குளம் பிர்க்காவைச் சேர்ந்த பின்னத்தூர், தில்லைவிடங்கல், நஞ்சைமகத்து வாழ்க்கை ஆகிய கிராமங்களில் கான்சாகிப் வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகின்றன,
இக்கிராமங்களில் சமீப ஆண்டுகளாக பாசன வரத்து தாமதப்படுவதால் சம்பா பருவத்தில் நெல் ரகங்களை சாகுபடி செய்துவிட்டு, தை மாதம் விதைப்பு மேற்கொள்ள வேண்டிய நஞ்சை சாகுபடியை விவசாயிகள் கைவிட்டு விட்டனர்.
இதற்கு மாறாக நடப்பு சம்பா பருவத்தில் நேரடி விதைப்பு முறையை பின்பற்றி செப்.1ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் நெல் விதைப்பு செய்திடவும், ஜனவரி 5ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் பயறு வகை விதை செய்திட வேண்டும்.
நேரடி விதைப்பு மேற்கொள்ள சுவர்ணா சப்-1, இஞ (த)- 49, இஞ (த)-50, ஆகிய ரகங்கள் ஒரு கிலோ ரூ.10 மானியத்தில் சிதம்பரம், பின்னத்தூர், பரங்கிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது என ஆ.ரமேஷ் தெரிவித்தார்.
கூட்டத்தில் தில்லைவிடங்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இதயத்துல்லா, முகமதுசாலி, பக்கீர்முகமது, ஹாஜாமொய்தீன், ஜபருல்லா, அப்துல்மாலிக், நவநீதம் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். உதவி வேளாண் அலுவலர் ராஜலட்சுமி நன்றி கூறினார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக