ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடலூரில் நேற்று மாலை 6 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. ½ மணி நேரம் இந்த மழை நீடித்தது. பின்னர் 9 மணி வரை லேசாக மழை பெய்தது. கடலூர் அருகே உள்ள புதுநகர், மஞ்சகுப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர், கோண்டூர், நத்தம்பட்டு, துறைமுகம், குறஞ்சிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இரவில் மழை கொட்டியது.
இதுபோல் புவனகிரியில் இரவு 7 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை 8 மணி வரை நீடித்தது. நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை லேசாக சாரல் அடித்தது. சிதம்பரம், பரங்கிபேட்டை, சி.முட்லூர், சேத்தியாத்தோப்பு உள்பட பல்வேறு பகுதிகளிலும் இரவில் மழை கொட்டியது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக