செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கடலூர்- புதுச்சேரி சாலை பெண்ணையாற்று பாலம் சீரமைப்பு பணி :போக்குவரத்து மாற்றம்


கடலூர்: கடலூர் பெண்ணையாற்றுப் பாலம் சீரமைப்பு பணி நேற்று துவங்கியதைத் தொடர்ந்து, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கடலூர், கெடிலம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அண்ணா பாலம், இணைப்பு பகுதிகள் சேதமடைந்து அதிர்வுகள் ஏற்பட்டு வந்தது. மேலும், இணைப்பு பகுதிகளில் ஏற்பட்ட பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. இதே நிலையில் பெண்ணையாற்றுப் பாலமும் இருந்து வந்தது. இதனையொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரண்டு பாலங்களையும் சீரமைக்க 1.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கெடிலம் ஆற்றுப்பாலம் சீரமைக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, பெண்ணையாற்றுப் பாலம் சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. இதனால், போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
அதன்படி கடலூரிலிருந்து புதுச்சேரி, சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் பெண்ணையாற்றின் பழைய பாலம் வழியாக செல்லவும், கடலூர் நகருக்குள் வரும் வாகனங்கள் சீரமைக்கப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி வழியாக வரவும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக