செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மீன்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெருவில் உள்ள சேத்துக்குட்டையை தூர் வார வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சருக்கு பருவத ராஜ குல மீனவர் கிராம பஞ்சாயத்து அறங்காவலர் குழு தலைவர் கனகசபை கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

மனு விபரம்: பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெருவில் சேத்துக்குட்டை உள்ளது. பெரியக்கடை தெரு, சின்னக்கடை தெரு, வாத்தியாபள்ளி தெரு, , கோட்டாத்தங்கரைத் தெருக்களில் இருந்து வரும் மழை நீர் மூன்று கண் மதகு, பதினைந்து கண் மதகு, சேத்துக்குட்டை வழியாக வெள்ளாற்றில் கலக்கிறது.தற்போது சேத்துக்குட்டை தூர்ந்துள்ளதால் மழை காலங்களில் மழைநீர் குடிசை வீடுகள் உள்ள பகுதியில் புகுந்துவிடுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கிராம மீனவர்களின் கண்ணாதோணி, கட்டுமரங்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது.வரும் காலத்தில் மழை நீர் குடிசை வீடுகள் உள்ள பகுதியில் புகாமல் தடுப்பதற்கும், மீனவர்களின் உடமைகளை காப்பாற்றவும் சேத்துக்குட்டையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக