செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

ஒரு பவுன் செலவு செய்தால் பல பவுன் களவு போகாது.. கடலூர் போலீஸின் அதிரடி அட்வைஸ்!

கடலூர்:கடலூர் காவல்துறை பொதுமக்களுக்கு திருட்டுச் சம்பவங்களிலிருந்து தப்பிக்க ஒரு அறிவுரையை பொதுமக்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.இதில் கூறியுள்ளவற்றின்படி செயல்பட்டால் நிச்சயம் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கலாம் என்பது கடலூர் காவல்துறையின் எண்ணம்.கடலூர் புதுநகர் காவல் நிலையம் சார்பில் இந்த அறிவுரை மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில் உள்ளதாவது...

கடலூர் புதுநகர் காவல்துறையின் வேண்டுகோள். வீட்டுக்கு வீடு கேமரா வைப்போம். குற்றம் நடப்பதைத் தடுப்போம்
 
பொதுமக்களே சிந்திப்பீர் பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டும் நாம், ஆசை ஆசையாக பவுன் நகைகளை வாங்கி வைக்கிறோம்.

எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் களவாணிகள் ஏதாவது வழியில், குற்றம் செய்து, உங்களது சொத்தைக் களவாடிச் செல்கின்றனர். காவல்துறை கண்டுபிடிக்க எந்தத் தடயமும் இல்லாமல் போனால் எப்படி கண்டுபிடிப்பது?
எனவே வீ்ட்டுக்கு வீடு கேமரா வைப்போம். களவு போகாமல் தடுப்போம்.


சிந்தியுங்கள். ஒரு பவுன் செலவு செய்தால், பல பவுன் களவு போகாது.
களவு குறித்து தெரிவிக்க குற்றம், களவு, சட்டவிரோத செயல்கள் பற்றிய தகவல் தெரிவிக்க
 
 காவல் ஆய்வாளர் , புதுநகர் காவல் வட்டம் கடலூர். செல் 944329209. புதுநகர் காவல் நிலையம் - 04142 - 284350. இந்த துண்டுப் பிரசுர அறிவுரையை புதுநகர் காவல் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும் காவல்துறையினர் வினியோகிக்கவுள்ளனராம். நல்ல யோசனையாக இருக்கிறதே.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக