திங்கள், 4 ஆகஸ்ட், 2014

வங்கி ஏடிஎம் பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடு!!

மும்பை: இனி வங்கி ஏடிஎம் உரிமையாளர்கள் பிற வங்கி நகர ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இத்திட்டம் வரைவில் வங்கியாளர்கள் அமல்படுத்த உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது ஒரு மாதத்திற்கு 5 முறை பயன்படுத்தலாம்.

இந்திய கிராமங்களில் மற்றும் டவுன் பகுதிகளில் சில வங்கிகள் இன்னும் ஏடிஎம் இல்லாமல் இருக்கிறது. இதனை களையும் வகையில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் 5 முறை சேவையை அளிக்க வலியுறுத்தியது. ஆனால் வாங்கியாளர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின்ருக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் துவங்கியது
வங்கியாளர்கள் தரப்பில் ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணம் தொடரந்து அதிகரித்து வருவாதல் இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம்களில் இத்தகைய சேவையை அளிக்க முடியாது என தெரிவித்தனர்.
எனவே வங்கியாளர்கள் பயன்பாட்டு முறையை குறைத்ததை அடுத்து அதற்கான கட்டணத்தை 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்த ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் கட்டணத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை


மற்ற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தி ஒரு மாதத்துக்கு ஐந்து முறை பணம் எடுக்க முடியும். இந்த எண்ணிக்கையை 2 தடவையாக குறைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. ஆனால் கிராமப்புறங்களில் இந்த சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியதாக தெரிகிறது.
 
 
இந்த உத்தரவு அமலுக்கு வரும்போது மூன்றாவது முறை மற்ற வங்கி ஏடிஎம்-மை பயன்படுத்தினால் 20 ரூபாய் செலுத்தவேண்டி இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தவிர்த்து மற்ற ஏடிஎம்மை பயன்படுத்தும் போது அந்த வங்கிக்கு வாடிக்கையாளர் வங்கி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கிறது.

இதை தவிர்ப்பதற்காகவே இலவச பரிவர்த்தனைகள் குறைக்கப்பட இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த கட்டணம் 10 சதவீதத்துக்கு மேல் அதிகமாக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் வாடிக்கையாளார்கள் தற்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். 2009-ம் ஆண்டு மற்ற வங்கி ஏடிஎம்களை ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அல்லது 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதித்தது.

 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக