காஸா:இஸ்ரேலுக்கும், காஸாமுனை ஹமாஸ்இயக்கத்திற்கும் இடையேயான 3 நாள் சண்டை நிறுத்தம் நேற்று முன்தினம் அமலுக்கு வந்த சில மணி நேரத்திலேயே தோல்வியில் முடிந்தது.
காஸாமுனையில் ரபா பகுதியில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை தொடுத்தது. இடைவிடாது குண்டுமழை பொழிந்தது. இந்த தாக்குதலில் குறைந்தது 160 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்துடன் சேர்த்து இஸ்ரேல் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1800 ஐ கடந்து விட்டது. இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள்தான். ஹமாஸ் இயக்கத்தினர் 51 ராக்கெட்டுகளை வீசியதுடன், பீரங்கி தாக்குதலையும் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.
இந்நிலையில் போரினால் உற்றார் உறவினர்களை இழந்த குழந்தைகள் படிக்க ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் பள்ளி ஆகும்.இதில் இந்த பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் இன்று காஸாவின் தெற்கு பகுதி நகரமான ரஃபாவிலுள்ள பள்ளி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் சிறுவர், சிறுமிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்ஹ்ட ஈவு இரக்கமற்ற செயல் உலகநாட்டில் பெரும் எதிர்ப்பை எற்படுத்தில் உள்ளது
கடந்த 10 நாட்களில் பாலஸ்தீனத்தில் செயல்படும் ஐநா பள்ளிகள் மீது நடத்தப்பட்ட 3வது மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். வடக்கு பாலஸ்தீனத்தின் ஜபாலியா நகரில் நான்கு நாட்களுக்கு முன்பு பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் தொடுத்துவருவது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.இதனால் ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் அதிருப்தி கருத்துக்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.கடந்த 10 நாட்களில் பாலஸ்தீனத்தில் செயல்படும் ஐநா பள்ளிகள் மீது நடத்தப்பட்ட 3வது மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக