திங்கள், 4 ஆகஸ்ட், 2014

காமன்வெல்த் போட்டிகள் நிறைவு:15 தங்க பதக்கத்துடன் 5வது இடத்தில் இந்தியா

கிளாஸ்கோ: நடப்பு காமன்வெல்த் போட்டிதிருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் கடந்த 23ம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக தொடங்கியது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்க வேட்டையில் ஈடுபட்டனர்.கடந்த 23ந் தேதி துவக்க விழா நிகழ்ச்சிகளுடன் துவங்கிய போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் இந்தியா 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் மொத்தமாக 64 பதக்கங்கள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தது. இங்கிலாந்து அணி 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலப்பதக்கங்களையும் வென்று முதலிடத்தை பிடித்தது. அதே போல் 49 தங்கம், 42 வெள்ளி மற்றும் 46 வெண்கலத்துடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், 32 தங்கம், 16 வெள்ளி, 34 வெண்கலத்துடன் கனடா மூன்றாவது இடத்தையும், 19 தங்கம், 15 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து நான்காவது இடத்தையும் பிடித்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக