சனி, 30 ஆகஸ்ட், 2014

கடலூர் மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற வேண்டும்

கடலூர் :கடலூர் மாவட்டம் திட்டக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகள், பிளாஸ்டிக் உபயோகம் இல்லாத முன்னாடி மாவட்டமாக திகழ வேண்டும் என தமிழக அரசு பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திரரத்னூ தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகாம் அலுவலகத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பேரூராட்சிகளில் இயக்குநர் ராஜேந்திரரத்னூ பங்கேற்று ஆய்வு மேற் கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.சுரேஷ்குமார், பேரூராட்சிகளில் உதவி இயக்குநர் (பொறுப்பு) தி.ஜீஜாபாய், உதவி செயற் பொறியாளர் ஆ.இசக்கி, செயல் அலுவலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் பிளாஸ்டிக் உபயோகம் இல்லாத மாவட்டமாக கடலூர் மாவட்டத்தைக் கொண்டு வர வேண்டும். பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் உபயோகத்தினை குறைக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்கள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பரத் தட்டிகள் வைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், பேருந்து நிலையக் கடைகள் போன்றவற்றிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி பிளாஸ்டிக் உபயோகித்தினை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என செயல்அ லுவலர்களுக்கு அறிவுறுத்தப்
பட்டது.
மேலும் பேரூராட்சிகளில் கும்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பைகளிலிருந்து பெருமளவில் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கவும், குப்பைகளிலிருந்து மறு சுழற்சி செய்யப்பட வேண்டிய பொருள்களை தனியாக பிரித்து தயாரிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் பேரூராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் இப்பணிகளில் முழுஅளவில் ஈடுபடுத்த வேண்டும்.
சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் கூலி வழங்கப்படும் என பேரூராட்சிகள் இயக்குநர் ராஜேந்திரரத்னூ தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக