லால் பேட்டை :கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு ஆயரத்து 65 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வீராணம் ஏரி
கடலூர் மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரியாகும். இந்த ஏரிக்கு தஞ்சை, அரியலூர் மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது வழக்கம்.
ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன் மூலமாக 44 ஆயிரத்து 826 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப சென்னை மக்களின் குடிநீருக்காக நாள்தோறும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
அதிகரிப்பு
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர், கல்லணை, கொள்ளிடம் வழியாக கீழணைக்கு கடந்த 21–ந் தேதி வந்தது. கீழணையின் மொத்த நீர் மட்டம் 4.10 அடியை தொட்டபோது, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 22–ந்தேதி வினாடிக்கு 250 கன அடி விதம் திறக்கப்பட்டது. அப்போது வீராணம் ஏரியின் நீர்மட்டும் 41.10 அடியாக இருந்தது.
நேற்று முன்தினம் முதல் கீழணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 65 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது. நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. அதாவது 41.10 அடியாக இருந்த வீராணம் ஏரி 42.75 அடியாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக