பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.சுரேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அம் மனுவின் விவரம்: , பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறன்றன.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் குடியிருப்புகளை சுற்றிலும் நிறுவனம் வேலி அமைத்து மக்கள் நடமாட முடியாமலும், பெண்களுக்கு கழிப்பிட வசதி இல்லாமலும், தொழிலாளர்கள், மீனவர்கள் என அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
ஐ.எல்.எஃப்.எஸ். தமிழ்நாடு பவர் கம்பெனி அமைத்து வரும் இடத்தில் விவசாய தினக்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்த கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து விட்டனர். அவர்களுக்கு அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நிறுவனத்துக்கு நிரந்தர பணியாளர்கள் தேர்வு செய்யும் போது அப்பகுதி கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். நிறுவனத்தில் தயாரிக்கும் மின்சாரம் மிகுந்த வெப்பம் உடையது என்பதால், குடிசை வீடுகளில் வசிக்க இயலாது. இதனால் அனைவருக்கும் கழிப்பிட வசதியுடன் கூடிய கான்கிரீட் வீடு கட்டித் தர வேண்டும்.
மாணவர்கள் கல்வி பயில உதவும் வகையில் கரிக்குப்பம், பஞ்சங்குப்பம், கொத்தட்டை கிராமங்களில் பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
அனைத்து கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
கரிக்குப்பம், பஞ்சங்குப்பம், புதுக்குப்பம் மீனவ கிராமங்களின் சுடுகாட்டையும், சுடுகாட்டு பாதையையும் அந்நிறுவனம் ஆக்கிரமித்து உள்ளது. சுடுகாட்டு ஆக்கிரமிப்பை உடனே கைவிட வேண்டும்.
நகர் புறங்களுக்கு செல்ல பேருந்து வசதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் அம் மனுவில் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.
photo :file

0 கருத்துகள்:
கருத்துரையிடுக