ஜெனிவா :எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் தற்போது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள லைபீரியா, நைஜீரியா, சியாராலோன், கினியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பரவி வருகிறது.
இந்த நோய்க்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதை கட்டுப்படுத்த மருந்து எதுவும் இல்லை. எனவே இது ஒரு உயிர்க்கொல்லி நோய் என உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்துள்ளது. மேலும் அவசர கால பிரகடனமும் அறிவித்துள்ளது.
அதை தொடர்ந்து உலக நாடுகள் இந்த நோயை மேலும் பரவ விடாமல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நோய் கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவியுள்ளது. முதன் முறையாக இதன் பிறப்பிடம் தென் மேற்கு கினியா என தற்போது தெரிய வந்துள்ளது.
கினியாவின் தென்மேற்கில் குயக்கேடோ கிராமம் உள்ளது. இது சியாரோலோன் மற்றும் லைபீரியாவின் எல்லையில் உள்ளது. அங்கு குடியிருந்த 2 வயது சிறுவனுக்கு தான் முதன் முதலில் ‘எபோலா’ வைரஸ் நோய் தாக்கியுள்ளது.
அந்த நோய் தாக்கத்தால் அவன் கடந்த டிசம்பர் மாதம் 6–ந் தேதி உயிரிழந்தான். அதை தொடர்ந்து ஒரு வாரத்தில் அவனது தாயாரும், 3 வயது அக்காவும், அதன் பிறகு அவனது பாட்டியும் இறந்தனர்.
இவர்கள் அனைவரும் காய்ச்சல், வாந்தி மற்றும் பேதியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இருந்தும் அதைப்பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையே பாட்டியின் சாவுக்கு துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள். 2 பேரை ‘எபோலா’ வைரஸ் கிருமி தொற்றிக் கொண்டது.
அந்த கிருமியை சுமந்தபடி அவர்கள் தங்கள் கிராமங்களுக்கு சென்றனர். அவர்களும் சில நாளில் இறந்தனர். இவர்கள் மூலம் இந்நோய் மற்ற நகரங்களுக்கும் பரவியது.
தொடக்கத்தில் ‘எபோலா’ பாதித்த குயக்கேயோ கிராமம் சியாரோலோன் மற்றும் லைபீரியா எல்லையில் இருப்பதால் அந்த நோய் இங்கும் பரவியது. கடந்த மார்ச் மாதத்தில் 50–க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதன் பிறகு தான் ‘எபோலா’ வைரஸ் நோய் பற்றி வெளியே தெரியவந்தது.
தொடக்கத்தில் இந்த நோய் குறித்து தெரியாத கண்டறிய முடியாத நிலை இருந்தது. தற்போது தான் அது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு இந்த நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை கமிட்டி கூட்டம், ஜெனீவாவில் 2 நாட்களாக நடைபெற்றது.
அதன் முடிவில், எபோலா நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கரெட் சான் கூறியதாவது:-
எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதிக்க வேண்டும். விமான நிறுவனங்கள், அந்நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கும்போது முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளும், விமான நிலையங்களும் அந்நோயை கண்டறிந்து தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மற்ற நாடுகள் உதவ முன்வர வேண்டும்.
மேலும் இந்தியாவிலும் பரவும் பீதி உருவாகியுள்ளதால் மத்திய சுகாதார அமைச்சகம் 24 மணி நேர அவசர உதவி மையத்தை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
(9-ம் தேதி) முதல் செயல்பட தொடங்கிய இந்த உதவி மையத்தின் அவசர அழைப்பு தொலைபேசி எண்கள் ’011-23061469, 3205 மற்றும் 1302’ என்று அறிவித்த மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ் வர்த்தன், ‘எபோலா காய்ச்சல் பற்றி மக்கள் பீதியடைய தேவை இல்லை. இது தொடர்பாக, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எபோலா அறிகுறிகளால் பாதிக்கப்படும் டெல்லிவாசிகளுக்கு சிகிச்சை அளிக்க டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எபோலா நோயின் தாக்கம் தொடர்பாக கண்காணித்து, உஷார் நிலையில் இருக்கும்படி அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தி இருப்பதாகவும், எபோலா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வசித்து வரும் சுமார் 47 ஆயிரம் இந்தியர்களை அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்பு கொண்டு, இந்நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் எபோலா நோயின் பாதிப்பு இல்லை என்று தமிழக அரசின் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் எபோலா அறிகுறிகளுடன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேனி மாவட்ட வாலிபர் பார்த்திபனும் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.அவரை 21 நாட்களுக்கு கண்காணிக்குமாறு தேனி அரசு மருத்துவமனைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பார்த்திபன் தேனி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.சரிவர தடுப்பு மற்றும் நோய் குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நோயான எபோலா உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை 2000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார அமைப்பு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக