திங்கள், 11 ஆகஸ்ட், 2014

பரங்கிப்பேட்டை அரிமா சங்க செயல்பாடு மற்றும் நலத்திட்ட உதவிகள்

பரங்கிப்பேட்டை :   பரங்கிப்பேட்டை அரிமா சங்க  நலத்திட்ட உதவிகள் மற்றும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பசுமை செயல் திட்டங்கள் மற்றும் செயல்பாடு மற்றும் சேவை திட்டங்கள் புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழச்சி பரங்கிப்பேட்டை கும்மத் பள்ளி தெரு  ரஹ்மான்ஸ் அரங்கில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்றது
இந் நிகழ்வில் அரிமா சங்கம் பரங்கிப்பேட்டை சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மேலும் பசுமை பணிகளில் ஆர்வம் உரியோகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் மரக்கன்ருகளும் வழங்கப்பட்டது  இந் நிகழ்வில் பேரூராட்சி தலைவர்  முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் பேரூராட்சி துணைத்தலைவர் நடராஜன், ஏ.கே.டி. அன்சாரி மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள்  வட்டாரத்தலைவர் மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.












 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக