ஞாயிறு, 6 ஜூலை, 2014

ரியாத்தில் நடைபெற்ற P I A ரமளான் சகோத​ரத்துவ சங்கமம் (இப்தார் நிகழ்ச்சி)

ரியாத் :கடந்த ஏழு வருங்களாக மேலாக ரியாத்தில் இயங்கி வரும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம். (P.I.A) இந்த வருடம் ”குடும்பங்களுடன் சகோதரத்துவ சங்கமம்” என்ற நிகழ்ச்சியை ரமளான் சிறப்பு நிகழ்ச்சியாக ரியாத்தில் மத்தியிலுள்ள ”ஹாஃப்மூன் ஹோட்டலி”ல் ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த 03-07-2014 வியாழக்கிழமை மாலை 5.30க்கு துவங்கிய நிகழ்ச்சி 7.30 வரை நடைப் பெற்றது.
சங்கத்தின் தலைவர் z. முஹம்மத் முபாரக் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியை I.ஷாஹூல் ஹமீத் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.

சங்கம் துவங்கப்பட்ட நோக்கம், இதுவரை செய்துள்ளப் பணிகள், இனி தொடர்ச்சியாக செய்ய வேண்டிய பணிகள் பற்றியும், இச்சங்கத்திற்காக உழைப்பவர்கள் பொது பணத்திலிருந்து ஒரு ருபாயைக் கூட செலவு செய்யாமல் தங்கள் சொந்த பொருளாதாரத்தை செலவிட்டு உழைக்கிறார்கள் என்ற விபரத்தை சங்கத்தின் முன்னாள் பொருளாளர் R.தமிஜூத்தீன் விளக்கினார்.
 
சங்கத்தின் இன்றைய பொருளாளர் S.செல்லராஜா தற்போதைய பொருளாதார இருப்பறிக்கையை சமர்பித்தார்.



முன்னாள் நிர்வாகிகளான S.M செய்யத் அப்துல் காதர், H. முஹம்மது ஹூசைன் (அபூரைய்யான்) கருத்துரை வழங்கினார்கள்.  சங்கத்தின் நிதிநிலை உயரும் போது கேன்ஸர் போன்ற கடும் நோயாளிகளுக்கு முதலுதவி வழங்கலாம் என்ற கருத்தை அபூரைய்யான் முன்மொழிந்தார்.

தொடர்ச்சியாக மார்க்க சொற்பொழிவிற்கு ஒதுக்கப்பட்ட ”நாமும் நமது ரமளானும்” என்றத் தலைப்பில் ஜி. நிஜாமுத்தீன் உரையாற்றினார்.

லைலத்துல் கத்ரின் மகத்துவம் பற்றி குறிப்பிடும் போது அல்லாஹ் நாடி பத்து லைலத்துல் கத்ர் நமக்கு கிடைத்து விட்டால் மிகப்பெரும் நபிமார்கள் காலம் முழுவதும் செய்த அமல்களுக்கொப்ப நமக்கு நன்மைக் கிடைத்துவிடும்.  முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்திற்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருள் இது என்று குறிப்பிட்டு, 




நாம் 60 வருடங்கள் வாழ்வதாக நினைத்துக் கொண்டாலும் அல்லாஹ்வின் கணக்குப்படி நாம் கிட்டத்தட்ட ஒன்னேகால் மணி நேரம் தான் வாழ்கிறோம். அதில் முக்கால் மணிநேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கி விட்டு நமது தேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் போக அல்லாஹ்விற்றாக சில வினாடிகளே செலவிடுகிறோம் என்றும், ரமளான் போன்ற சிறப்பான காலங்களை நாம் முழுதும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களுக்க தேவை இருந்த போதும் பிறரது தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்த நபித்தோழர்களை முன்னுதாரணமாக எடுத்து ஆண்களும் பெண்களும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்றார்.

இஃப்தாருக்கு பிறகு தொடர்ந்த மார்க்க உரையில் மேலப்பாளையத்தை சேர்ந்த ஷர்புத்தீன் அஷ்ரபி ”ஊர் சகோதரர்கள் இப்படி குழுமி நற்காரியங்களை செய்வதை பார்க்க சந்தோஷமாக இருக்கின்றது என்று குறிப்பிட்டு ”அலட்சியமாக்கப்படும் தப்பும் தவறுகள்” என்ற தலைப்பில் பேசினார்.

ஸலாமிற்கு பதிலளிக்காதது, செல்போனால் ஏற்படும் தீமைகள், பொய் பேசுவது உட்பட பல தவறுகளை சுட்டிக் காட்டியது அவரது உரை.

15 ரியால் இந்த வருட பித்ரா தொகையாக தீர்மானிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.



 
பரங்கிப்பேட்டையை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குழந்தைகளுடன் சுமார் தொனுருகும் 90 மேற்பட்ட பரங்கிபேட்டை வாசிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்
 I.ஷாஹூல் ஹமீத் நன்றி கூறினார்  உணவு பரிமாற்றத்திற்கு பிறகு கூட்டம் நிறைவுற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக